கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கம்

மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கோவை- பொள்ளாச்சி பயணிகள் ரயில் சேவை இன்று (ஜூலை 15) துவக்கப்பட உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கோவை - பொள்ளாச்சி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. ஆனால், ரயில் போக்குவரத்து சேவை துவங்குவதற்கான தேதி குறிப்பிடப்படாமல் காலம் கடந்துவந்தது.

இந்நிலையில் இன்று கோவையில் இருந்து மதியம் 1.35 மணிக்கு பொள்ளாச்சிக்கு ரயில் (ரயில் எண்- 06081) புறப்படுகிறது. இந்த ரயில் பொள்ளாச்சிக்கு 2.40-க்கு சென்றடையும். தொடர்ந்து மாலை 3.15 மணியளவில் (ரயில் எண்- 06082) புறப்பட்டு கோவைக்கு 4.30 மணிக்கு வந்தடையும். 

இதன் துவக்க விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கட்டுமான தலைமை பொறியாளர், உதவி தலைமை பொறியாளர் உட்பட பலர்கலந்து கொள்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...