ராஜ விதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவக்கம்


கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவங்கியது. இதனை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூர் மருதாசல அடிகளார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



முதல் விற்பனையை துவக்கி வைத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், புத்தக வாசிப்பு என்பது அனைவரிடமும் உருவாக வேண்டும். இது மாதிரியான புத்தக திருவிழாக்களால் புத்தக வாசிப்பு மக்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சமுக வலைதளங்களின் மூலம் வாசிக்கப்படுவது மனதில் தங்குவது இல்லை. புத்தகமாக படிக்கும்போது மன பயிற்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

இன்று துவங்கிய இந்த புத்தக திருவிழா வரும் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆன்மீகம், அறிவியல், குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட சில புத்தகங்களுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளதாக விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் தெரிவித்தார். பல்வேறு தரப்பட்ட நூல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தக கண்காட்சி கோவை மக்களின் புத்தக வாசிப்புக்கு கிடைத்த விழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...