ஹூப்ளியில் இருந்து கோவைக்கு சேவையாற்றிய கங்கா மருத்துவமனையின் பறக்கும் ஆம்புலன்ஸ்

கோவை கங்கா மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பறக்கும் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த இந்த சேவைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், தமிழகத்தில் கோவையில் இதுவே முதன் முறையாகும் என்பதால் அதிகப்படியான வரவேற்பை இந்த அம்புலன்ஸ் சேவை பெற்றது. இந்த சேவை துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை ஆறு நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

இதனிடையே, ஹூப்ளியில் காயம் மற்றும் பாலித்ராமா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இளம் அனஸ்தியாலஜிஸ்ட் கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் சேவை மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.

பொதுவாக, பிற ஏர் அம்புலன்ஸ் சேவை மூலம் ஹூப்ளியில் இருந்து கோவை வர நீண்ட நேரம் மற்றும் 6 லட்சம் ரூபாய் வரை தொகை செலுத்த வேண்டும். ஆனால், கங்கா மருத்துவமனையின் இந்த சேவையில் நோயாளி 2.45 மணி நேரத்தில் கோவை வந்தடைந்தார். மேலும், மானியம் உள்ளிட்ட சலுகைகளின் அடிப்படையில் இச்சேவைக்கு 3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...