ஜிஎஸ்டி வரி உயர்வால் லட்சக் கணக்கில் தேங்கிய நீலகிரி தேயிலைகள்


மழைகளின் இளவரசியான உதகையில் அதிகப்படியான தேயிலை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேயிலைகள் இந்தியா முழுக்க மற்றுமின்றி உலகத்தின் பெரும்பகுதிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலையும், குறிப்பாக உற்பத்தி நிறுவனங்களில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ தேயிலை பயனற்ற நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.



தற்போது நீலகிரியில் தேங்கிக் கிடக்கும் தேயிலைகளின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் இருக்கும் என நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் ஜூலை 1ம் தேதியன்று உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியே என இச்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேயிலை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் கூறுகையில், நீலகிரியில் குறிப்பாக குன்னூர் பகுதியிலேயே தேயிலை விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இத்தொழிலை நம்பி ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர். இவர்களுக்கு தேயிலை ஏற்றுமதியின் போது குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கும். ஆனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் இடைத்தரகர்களுக்கு எதன் அடிப்படையில் கமிஷன் தொகை தருவது என குழப்பம் நீடித்து வருகிறது.



இவ்வாறு உதகையில் தேயிலைத் தொழிலை நம்பியுள்ள அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜூலை 21ம் தேதி முதல் தேயிலைச் செடியில் இருந்து புதிதாக தேயிலை பறிக்கும் பணி நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இத்தொழிலை நம்பியுள்ள நீலகிரி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...