கோடநாடு கொள்ளை வழக்கு- 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோடநாடு கொள்ளை வழக்கில் கைதான 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கும் திட்டத்துடன் நுழைந்த மர்மநபர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கைதான 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் 10 பேரில் தீபு, உதயகுமார், சதீஷன், குட்டி பிஜின், மனோஜ் உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...