பெரியநாயக்கன்பாளையத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் பருவமழை காலம் தொடங்கியதையடுத்து அனைத்து ஊரகப்பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் களஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன்படி, இன்று (19.07.2017) பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையன்பாளையம், கணுவாய் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை ஆகிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்ததாவது:-

குடிநீர் மூலம் உற்பத்தியாகும் லார்வாக்கள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரகப்பகுதிகளிலும் சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடாத வகையில் பணியாற்றிட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தபட்டுள்ளது.

ஒவ்வொரு அலுவலர்களும் புறவெளிகளில் தூய்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று தண்ணீர் தேக்கிவைத்துள்ள தொட்டிகள், பிரிட்ஜில் உள்ள தண்ணீர் சேமிப்பான், வாளி போன்றவற்றினை சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்திடல் வேண்டும். நீண்டநாட்களாக கண்டிப்பாக தண்ணீர் சேமித்து வைக்ககூடாது அது சுகாதார சீர்கேட்டிற்கே(கொசு உற்பத்தியாகவே) வழிவகுக்கும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். தூய்மை பணி மேற்கொள்ள வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளை சுகாதாரமாக வைப்பதோடு மட்டுமல்லாமல், சுகாதாரக்கல்வியினை பள்ளிகளில் மாணவ மாணவியர்களிடையே கற்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.  என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சலை எவ்வாறு தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் எடுத்துறைத்தார்.

இவ்வாய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...