சேலம் ரயில் நிலையத்தில் குழந்தைகள் மீட்பு மற்றும் ஒப்படைப்பு மையம் திறப்பு

சேலம் ரயில் நிலையத்தில் குழந்தைகள் மீட்பு மற்றும் ஒப்படைப்பு மையம் திறப்பு மற்றும் செயலி கொண்டு இயங்கும் ஓலா வாடகைக் கார் வசதி துவங்கப்பட்டுள்ளது.



ரயில் நிலையங்களில் தவறவிடப்படும் மற்றும் காணாமல் போகும்/வீட்டிலிருந்து ஓடிவந்து ரயில்நிலையத்தில் தஞ்சம் புகும்,  சிறார்தொழிலுக்கு கடத்தப்படும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உதவி அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்க அல்லது அரசு நியமித்துள்ள தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு இந்திய ரயில்வே சிறார் உதவி தொலைபேசி எண்.1098 போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக, சேலம் ரயில்நிலையத்தின் நடைமேடை எண்.1/1Aல் அமைக்கப்பட்டுள்ள சிறார் உதவி மையத்தை தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் திருமதி பிரியம்வதா விசுவநாதன் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா ஆகியோர், சேலம்கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ. விஜுவின் மற்றும் இதர கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர். இந்திய ரயில்வே குழந்தைகள் நிறுவனம் மற்றும் கோர் (CORE) டிரஸ்ட் நிறுவனம் இணைந்து நிறுவியுள்ள இந்த உதவி மையம் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு 24 மணி நேரம் தமிழக அரசு அங்கீகரித்துள்ள சேவை நிறுவனங்கள், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே போலீஸ் அமைப்புகளுடன் இணைந்து தேவையான உதவிகளை, வழங்கும்.



துவக்க நிகழ்வில் பேசிய திருமதி பிரியம்வதா இந்திய ரயில்வே குழந்தைகள் நிறுவனமும் மற்றும் கோர் (CORE) டிரஸ்ட் நிறுவனமும் இந்திய ரயில்வேயுடன் கை கோர்த்து இத்தகைய உதவி மையம் அமைக்க முன்வந்த்ததை பாராட்டினார். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு வர்மா, இந்த உதவி மையம் சிறப்பாக செயல்பட சேலம் கோட்டத்தின் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைந்து அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்தார். 

பின்னர், பிரியம்வதா மற்றும் வர்மா ஆகியோர் சேலம் ரயில்நிலையத்தில், செயலி கொண்டு ஓலா வாடகைக்கார் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியை துவக்கி வைத்தனர். இதனால், சேலம் ரயில் நிலையம் வந்திறங்கும் பயணிகள், செல்பேசி செயலி மூலம் அல்லது சேலம் ரயில் நிலைய வளாகத்தின் வடபுறம் ஏடிஎம் அருகே உள்ள ஓலா வாடகைக்கார் நிறுத்தத்தில் உள்ள வாடகைக்கார் முன்பதிவு மையம் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லாமல் பயணிக்க உதவும்.



கோவைக்கு அடுத்தபடியாக சேலம் கோட்டத்தில் சேலம் ரயில்நிலையத்தில் இத்தகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியம்வதா சேலம் கோட்டம் இதுபோன்ற பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதில் தெற்குரயில்வேயில் முன்னணியில் உள்ளதாக பாராட்டினார். வர்மா அவர்கள் விரைவில் சேலம் கோட்டத்தில் உள்ள இதர முக்கிய ரயில்நிலையங்களிலும் இந்த வசதி விரைவில் விரிவு படுத்தப்படும் என்றார்.

பின்னர் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சேலம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த வணிகவியல் பிரிவு ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பிரியம்வதா சேலம் மற்றும் பாலக்காடு ரயில்வே கோட்டங்களை சேர்ந்த 103 ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 



இதனைத்தொடர்ந்து ஊழியர்களிடையே பேசுகையில், வணிகவியல் பிரிவு ஊழியர்கள் பயணிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் எப்போதும் இன்முகத்துடன், புகார்களுக்கு இடம் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்றும், 5 ரூபாய் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் பயணிகள் மற்றும் 5000 ரூபாய் பயணச்சீட்டு பெற்று பயணிகள் இருவரையுமே ரயில் பயணிகள் என்ற ஒரு கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பதுடன், பாரபட்சமின்றி அவர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விழாவில் பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் பாலக்காடு கோட்ட வணிக மேலாளர் சத்யநாராயண ஹரி கலந்து கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...