தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் சமூக வீரோதிகள் கலந்துள்ளனர்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் கலந்திருப்பதாகவும், எனவே தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவையாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் நடைபெறும் மறைந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இன்று கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னாள் என்ன சேவை செய்தார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளார்கள். பல வருடங்களாகவே சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்ததாலேயே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் போது தாங்கள் ஆதரவு அளித்தோம். தற்பொழுது இவ்வளவு பேசும் கமல் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு எவ்வளவோ பிரச்சனைகள் இருந்த போது எந்த கருத்தும் கூறாதது ஏன் ?.

திரைப்படத்தை போல் நினைத்துக்கொண்டு ஒரு நாள் முதலமைச்சர் ஆகலாம் என்ற கதை அரசியலில் இல்லை. அரசியல் என்பது ட்விட்டர் தளத்தில் இன்றி மக்களுடன் நிஜ தளத்தில் இருப்பது.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவையாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் கலந்துள்ளனர். சமூக பாதுகாப்பிற்காக ஒருவர் கைது செய்யப்படும் போது உண்மை தன்மையை அறியாமல் கருத்து கூறும் பழக்கம் எதிர்க் கட்சிகளிடையே உள்ளது. கர்நாடக சிறைத்துறையில் டி.ஐ.ஜி ரூபா மாற்றப்பட்டது குறித்து தீர விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...