வால்பாறை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, முள்ளம்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவை, வால்பாறையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன.



இந்நிலையில், வால்பாறை குடியிறுப்பு பகுதிகளில் சிறுத்தை புலி இரவு நேரங்களில் தொடர்ந்து நடமாடிவருவதாக அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வனத்துறையிடம் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வால்பாறை மார்கெட் பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகில் சிறுத்தை புலி, ஆட்டை கடித்து கொன்றது. இதைக்கண்ட மணிகண்டன் கூச்சலிடவே சிறுத்தை புலி அங்கிருந்து தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து தப்பிச் சென்றது. 



இதனைத்தொடர்ந்து, சிறுத்தைப் புலிகளால் வால்பாறை குடியிருப்பு பகுதியில் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...