இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நாளை துவங்குகிறது. கோவை சர்வஜனா பள்ளியில் நடைபெறவுள்ள பேன் பார்க் நிகழ்ச்சியில் ஆஸ்தேரிலியாவின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் பிரட் லீ பங்கேற்கிறார்.

இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் இரண்டாவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நாளை துவங்குகிறது. டுயூட்டி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் விளையாட்டு மைதானம், திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இரண்டாவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை துவங்குகிறது. முதல் போட்டியில் டுயூட்டி பேட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடுகிறது.

லீக் சுற்று முறையில் நடைபெறும் இப்போட்டியில் தேர்வாகும் அணி அடுத்த மாதம் 20-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும். தினேஷ் கார்த்திக், லக்‌ஷ்மிபதி பாலாஜி, முரளி விஜய், ரவிசந்திர அஸ்வின் என இந்திய அணியில் விளையாடிய முன்னணி வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இதன் துவக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டிகளை கண்டுகளிக்க கோவை சர்வஜனா பள்ளியில் பேன் பார் அமைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளிக்க அனைத்து வகையான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு கிரிகெட் சங்கம் மற்றும் எஸ்.என்.ஆர்.கல்லூரி நிர்வாகம் செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆஸ்தேரிலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ பங்கேற்று பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரை மூலம் போட்டியை கண்டு களிப்பதுடன் வர்ணனையும் செய்ய உள்ளார். மேலும், ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்துழைப்பை கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க அமைப்பினர் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...