டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8ம் வகுப்பு சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் ஜனவரி 2018-யில் தொடங்கப்படவுள்ள எட்டம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 2017 டிசம்பர் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளிலும் மற்றும் நேர்முகத் தேர்வு 2018 ஏப்ரல் 5ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

நுழைவுத் தேர்வில் 2018 ஜூலை 1 அன்று 11 வயது நிறைவு பெற்று ஆறு மாதம் முதல் 13 வயது வரை உள்ள ஏழாம் வகுப்பு பயின்று வரும் மற்றும் தேர்ச்சி பெற்ற ஆண் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும்.

விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை கமாண்டென்ட், ராஷ்ட்ரிய இந்தியன் திலிட்டரி கல்லூரி, டேராடூன்- 248 003, உத்ரகாண்ட் மாநிலம் எனும் முகவரிக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாட அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை 3 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 2017 செப்டம்பர் 30 ஆகும்.

இத்தேர்வு தொடர்பான மேலும் விபரங்களை www.rimc.gov.in எனும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தகுதியுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...