கோவையில் மெட்ரோ ரயில் அறிவிப்பிற்கு சிஐஐ வரவேற்பு

கோவை மாவட்டம், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம். தொழில்மயமான மாவட்டங்களில் கோவையும் ஒன்றாகும். மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 35 லட்சம் மற்றும் கோவை நகர்புற ஒருங்கிணைப்பு மக்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. தற்போது, நகரத்திற்குள்ளேயே போக்குவரத்து நெடுஞ்சாலைகள் முக்கிய வழிவகைகளாக உள்ளன. இவ்வாறு மக்கள் தொகை நிறைந்த கோவை மாவட்டத்தில் போக்குவரத்து முறை என்பது பல்வேறு இடையூறுகளுக்கு இடையேயே நடைபெற்று வருகிறது. 

2015 ஆம் ஆண்டில் சிஐஐ கோயம்புத்தூர் மண்டலம், மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் மீதான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் படி, எதிர்கால மக்கள்தொகை மற்றும் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பெரிய பயணிகள் போக்குவரத்தை கையாள பொருத்தமான வழிமுறையாக மெட்ரோ ரயில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மூலம், மக்கள் தொகை பெருகிய, தினசரி பயணிகளுக்கு  நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, சிஐஐ தமிழ்நாடு தலைவர் பி. ரவிச்சந்திரன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தனது பாராட்டுக்ளை தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், இந்த திட்டம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உள்ளது. ஏற்கனவே பல லட்சம் மக்களால் அன்றாடம் போக்குவரத்தில் நெரிசர் ஏற்பட்டு வரும் சூழலில் தற்போது சாலைகளின் ஏற்படும் இடையூறுகளை இத்திட்டம் குறைக்கும்" என்றார்.

சிஐஐ கோயம்புத்தூர் மண்டல தலைவர் எஸ். நாராயணன் இதுகுறித்து கூறுகையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவரும் சூழ்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தினை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றிகள். தனது குடிமக்களுக்கு சிறந்ததை வழங்கும் எந்தவொரு திட்டமும் வரவேற்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் கோவை நகரத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார். உலக அளவிலான, மெட்ரோ திட்டங்கள் தங்கள் சொந்த வாகனம் பயன்படுத்தி தனிநபர்களை சார்ந்திருப்பதைக் கொண்டு வருகின்றன. பெரும்பாலான பொது மக்கள் பயணிக்க தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் அவை நகர்த்துவதற்கான தரமான பொது போக்குவரத்து சாலையினை வழங்குவது அவசியம். எனவே மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், நகரத்தின் அனைத்து கவலையும் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...