தூர்வாரப்பட்ட குறிச்சி குளத்தில் படகுத்துறை அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்


பெருகி வரும் நீர் பற்றாக்குறையை போக்க அரசு ஆதரவுடன் ஈஷா அறக்கட்டளையும், நெய்வேலிபழுப்பு நிலக்கரி நிறுவனமும் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து குறிச்சி குளம் தூர்வாரும்பணி ஜூலை 22 (சனி)இன்று காலை 9 மணிக்கு குறிச்சி குளத்தில் துவங்கியது.



இந்நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் தலைவர் டாக்டர் சரத்குமார் ஆச்சார்யா, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.என்.ஹரிஹரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மஹேந்திரன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், என்.எல்.சி மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் விக்ரமன், பவானிசாகர் பொதுப்பணி துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் செந்தில்வேலன், குறிச்சி குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சுவாமிநாதன், கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

என்எல்சி இந்தியாநிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் சரத்குமார் ஆச்சார்யா பேசுகையில், கோவைநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள குறிச்சி குளத்தை ஆழப்படுத்த வேண்டுமென கோவை, ஈஷா யோகாமையத்தின் நிறுவனர் ஜத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்கள் விடுத்த வேண்டுகோளினை ஏற்று, என்எல்சி இந்தியாநிறுவனம் அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டதுடன் மதிப்பீடுகள் மற்றும் நில அளவுகளை தயாரித்து, அக்குளத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் கனமீட்டர் (சுமார் 1 கோடியே 20 லட்சம் கனஅடி) மணலை தூர் வாரி ஆழப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் நடைபெறவிருக்கும் இப்பணி 3 மாதங்களில் நிறைவு பெற உள்ளது என்றார்.

இந்த சமூக மேம்பாட்டுப் பணியின் மூலம், 280 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்குளத்தில், கூடுதலாக சுமார் 34 கோடிலிட்டர் நீர் சேமிக்க முடியும். வீணாகும் மழைநீரை இக்குளத்தில் தேக்குவதன் மூலம், அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் உயரவிருப்பதுடன், குளத்தில் சேமிக்கப்படும் நீரால் மனிதர்களும், கால்நடைகளும் பயனடைவார்கள். மேலும் தூர்வாரப்படும் மணலைப் பயன்படுத்தி இக்குளத்தின் கரைகள் செப்பனிடப்பட்டுஅதில் மரக்கன்றுகள் நடப்படஉள்ளதால் இப்பகுதியின் சுற்றுச் சூழல் மேம்பட விருக்கிறது என்றார்.



ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில், நீர் என்பது ஒருபொருள் அல்ல ஒருஉயிர். நாம் தற்போது குளங்களில் நீர்வராதவாறு வீடுகள் கட்டிவிட்டோம். குளத்திற்கு நீர் வருமாறு நாம் வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் குளங்கள் எங்கிருந்தாலும் அங்கு அரசு நிலப்பரப்பு ஆய்வு செய்து குளங்களில் தண்ணீர் வரும் வழி உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். மேலும், இந்த குறிச்சி குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி இதில் நீர் நிறைவதற்கு வழிசெய்ய வேண்டும்.  மேலும் இந்த குளத்தின் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு இதன்மூலம் வாழ்வாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

 

இந்தவிழிப்புணர்வு நாடெங்கும் உருவாக்க சத்குரு அவர்கள் குமரி முதல் இமயம் வரை 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்னும் பேரணி நடத்த உள்ளார். 16 மாநிலங்களில் நடக்க உள்ள இந்த விழிப்புணர்வு பேரணிகளுக்கு தாமே வாகனம் ஓட்டி செல்ல உள்ளார். 16 மாநில முதர்வர்களும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும்  பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.



அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், பல்வேறு சமூகநலத்திட்டங்கலில் தம்மை ஈடுபடுத்தியுள்ள சத்குரு அவர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை அணுகி குறிச்சி குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தியதற்கு பாராட்டினார். குறிச்சி குளத்தில் படகுசவாரி செய்யுப்படும், குளத்தை சுற்றி அழகிய நடைபாதைதளம் அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் சத்குரு அவர்கள் நடத்தவிருக்கும்' நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' பேரணியில் கோவையில் தாம்பங்கேற்க்க இருப்பதாக தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...