திருப்பூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிக முதலமைச்சர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா  நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது பல்வேறு நலத்திட்டங்களும் துவங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகியோர் நிகழ்ச்சித் திடலில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்க்கு மலர்தூவி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். 



இதனைத்தொடர்ந்து, திடலில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சி மையம் துவக்கி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடம்பூர் ராஜூ உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 



பின்னர், விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரியளவிலான மின்சாரத் திரைகளில் எம்ஜிஆரின் திரையுலகம், அரசியல், ஆட்சி உள்ளிட்ட பயணங்கள் குறித்து காணொளிகள் பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு மாவட்டம் முழுவதும் இருந்து அழைத்து வரப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவங்கி நடத்தப்பட்டது.



இதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார். அப்போது, மாணவர்கள் அனைவரும் என்றுமே தங்களின் முயற்சிகளை கைவிடக் கூடாது. என்று முயற்சி செய்வதை கை விடுகிறோமோ அன்று நாம் பின்னடைவை சந்திக்க துவங்குகிறோம். மாணவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சிகள் செய்து பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, உறுதியான போராட்ட குணம்கொண்ட எம்ஜிஆரின் வாழ்க்கை நம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். நாட்டின் எதிர்காலத்தை நல்லவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகவே இன்று மாணவர்களை இந்நிகழ்ச்சியின் விருந்தினர்களாக அழைத்து வந்திருக்கிறோம்'' என்றார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்கள் அடங்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின், மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கை குறித்தும், அதிமுக அரசின் ஆளும் பணிகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...