பூணூல் அணியும் விழாவை தடைசெய்யக் கோரி பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம்- கோவையில் தபெதிக அறிவிப்பு


சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் வகையில் ஆவணி அவிட்டம் நாளான்று நடைபெறும் பூணூல் அணியும் விழாவை தடை செய்யக்கோரி, வருகின்ற ஆகஸ்ட் 7 ம் தேதியன்று பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தப்படுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் வகையில் ஆவணி அவிட்டம் நாளன்று நடைபெறும் பூணூல் அணியும் விழாவை தடை செய்யக்கோரி வருகின்ற ஆகஸ்ட் 7-ம் தேதியன்று சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி வங்கிகளில் தமிழ் மொழியில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கவில்லை எனில் வங்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி வருகின்ற 27-ம் தேதி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...