வெள்ளலூர் குப்பைக் கிடங்கால் அப்பகுதி மக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது - சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றச்சாட்டு

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் நோய் வாய்ப்படக்கூடிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. இதற்காக சுமார் 684 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் தற்போது மலைபோல் குவிந்து கிடக்கின்றது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்கள் மூச்சு திணறல், ஆஸ்துமா, தோல் நோய்களாலும், மர்ம காய்சலாலும் பாதிகப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு  இந்த குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் வெள்ளலூர் குப்பை கிடங்கை இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளை முறையானபடி தரம் பிரிப்பதில்லை. மாநகராட்சி அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. 

கோவை மாநகராட்சியிலிருந்து தினமும் இங்கு ஆயிரம் டன் குப்பைகள் கொண்டு வரப்படுகின்றது. 684 ஏக்கரில் உள்ள இந்த குப்பை கிடங்கிற்கு வரும் குப்பைகளை அப்புறப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக 2006 - 2013 ம் ஆண்டு திமுக ஆட்சியில் 95.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்முறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு 6 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. 

இன்றைய நிலவரப்படி 50 ஆயிரம் டன் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த குப்பைகளால், வெள்ளலூர் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோய் ஏற்படக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த குப்பைகளை அகற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் மக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். வெள்ளலூர் குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் 24 மணி நேரமும் இங்கு தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கவேண்டும்.

இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...