புதுமைப் புகுத்தும் வேளான் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நான்காவது நாளாக கிணத்துக்கடவு ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. கோதவாடி குளம் அவ்வூர் மக்களுக்கு நன்னீர் தேக்கியாகப் பயன்பட்டு வந்தது. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், குளத்தைச் சுற்றி களைப் பயிர்களும், குப்பைகளும் அதிகளவில் காணப்பட்டன. ஊர் மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமாணவர்கள் குளத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 



மற்றொரு மாணவர் குழு சட்டக்கல்புதூரில் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். அப்பேரணியில் தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

கல்வி நிலையம் என்பது மாணவர்களுக்கு கற்றல் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்டும் இடமாக அமைய வேண்டும் என்பதில்  முழுமையான நம்பிக்கைக் கொண்டுள்ளது தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம். அதன் அடிப்படையில் சொக்கனூரில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடத்தைச் செம்மைப் படுத்தும் விதமாக வெள்ளைப் பூச்சு அடிக்கப்பட்டது. 

நாளின் இறுதி நிகழ்வாக சொக்கனூர் பகுதியில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பேராசிரியர்களின் வழிக்காட்டுதலுடன் காளான் வளர்ப்பு, காய்கறிகள் அறுவடை தொழில்நுட்பம், மண்புழு உரம் பயன்பாடு குறித்த சிறப்பு விளக்கவுரை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...