நிதீஷ்குமார், பாஜக இடையேயான புதிய கூட்டணி மக்களின் தீர்ப்பிற்கு எதிரானது வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத்தலைவர் குற்றச்சாட்டு

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், பாஜக இடையே ஏற்பட்டுள்ள புதிய கூட்டணியை வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கடுமையாக விமர்ச்சித்துள்ளது. புதிய அரசு உருவாக்கம் மக்களின் தீர்ப்பிற்கும் அரசியல் விழுமங்களுக்கும் எதிரானதாகும் என வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத்தலைவர் SQR இல்யாஸ் அறிக்கையில் தெரிவித்தார். மேலும், மக்களின் தீர்ப்பிற்கு நிதீஷ்-மோடி கூட்டணி மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

"சங்பரிவார் சித்தாந்தங்களுக்கு எதிரான, வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில்தான் பீகாரில் ஆர்ஜெடி- ஜெடியூ- காங்கிரஸ் மகா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். இவ்வெற்றியானது நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகளுக்கு நம்பிக்கை ஊட்டியது. இந்த புனிதமற்ற கூட்டணியை உருவாக்குவதற்கு முன்பாக குறைந்த பட்சம் அவர் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமாவது கருத்து கேட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு முன்னால் நிதீஷ்குமார் எவ்வித கொள்கைகளோ விழுமங்களோ இல்லாத நபர்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருக்கிறார். 

லாலுவிற்கும் அவரது மகன் தேஜஸ்விற்கும் எதிராக எழுந்த ஊழல் ஓலங்கள் எல்லாம் அரசியல் நாடகத்தின் ஒரு பகுதிதான் என்பது புகை மறைவின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் பதவி அரசியல் மேடையில் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் மட்டும்தான் என்பதை பாட்னாவில் நடந்தேறிய சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. பீகாரின் ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கண்ணியத்தையை களங்கப்படுத்தியுள்ளார்." என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், புதிய கூட்டணியை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும் முனைவர் SQR இல்யாஸ் தனது அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...