லக்ஷ்மி மெஷின் வொர்க்கர்ஸ் நிறுவனம் சார்பில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி

லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற்றது. 



இப்போட்டியானது, லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.ஜெயவர்த்தனவெலு நினைவாக 2012 முதல் கொண்டாடப்படுகிறது. 



அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். 



கடந்த ஜூன் 30ம் தேதியன்று www.djmpc.in என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் டிஜேஎம்பிசி 2017-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பாலன் மாதவன், ஆபூர்பா குமார் தாஸ் மற்றும் தியோடர்பாஸ்கரன், கே. மருதாசலம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தக் கண்காட்சி கோவை கஸ்தூரி ஸ்ரீநிவாசன் கலாச்சார மையத்தில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும்.



விலங்குகள் மற்றும் காடு சார்ந்த தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1484 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களிடம் இருந்து 6674 பதிவுகள் பெறப்பட்டது. 

இந்த புகைப்படப் போட்டியில் விலங்குகள் புகைப்படப் பிரிவில் சச்சின் ராய் முதல் பரிசும், நிதின் ஜெயின் இரண்டாம் பரிசும் வென்றனர். தொடர்ந்து, நிலப்பரப்பு புகைப்படப் பிரிவில் திவாஸ் ஜி ஹெட்ஜ் முதல் பரிசும், தேப்ராஜ் சக்ரபர்த்தி இரண்டாம் பரிசும் வென்றனர். முதல் பரிசிற்கு தலா ரூ.2.5 லட்சம் ரூபாயியும், இரண்டாம் பரிசிற்கு ரூ.1.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...