மத்திய பாஜக அரசின் புது புது திட்டங்கள்-விழி பிதுங்கும் நாட்டு மக்கள்!



ஒவ்வொரு திட்டத்திலும் தொடர்ந்து மக்களை வஞ்சித்து வரும் மத்திய அரசு தற்போது புதிதாக ஒரு மக்கள் விரோதத் திட்டத்தை அமல்படுத்தியிருப்பது நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அதாவது, இன்று மத்திய பாஜக மதவாத அரசு நிறைவேற்றியிருக்கும் புதிய திட்டம் எரிவாயு சிலின்டர்களுக்கான விலையை பெட்ரோலிய நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதியளித்திருப்பது, சிலின்டருக்கான விலையில் மாதம் தோறும் விலேயேற்றம், அடுத்த வருடம் முதல் அரசு வழங்கிவரும் சிலின்டருக்கான மானியம் ரத்து ஆகியவை ஆகும். மேலும், குடும்பத்தில் ஒருநபர் வருமான வரி கட்டினால் இனி ரேசனில் எந்த பொருளும் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மானிய சுமையை குறைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாதந்தோறும் 4 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 

ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்படும் பொது விநியோக திட்டம் மூலம் அனைவருக்குமான உணவு பாதுகாப்பினை தமிழக அரசு வழங்கிவருகிறது. எனவே, அனைத்துத் தரப்பினரும் வழக்கம்போல ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கலாம். ரேஷன் பொருள்கள் வாங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

மத்திய அரசின் திட்டமான, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தை கடைசியாக செயல்படுத்தியது தமிழ்நாடு. அது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். சில நிபந்தனைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்ட பின்னர்தான் உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழகத்தில் ஏற்றோம். எனவே, அது குறித்து வெளியிடப்படும் அறிவிப்புகள் தமிழக அரசிதழில் வந்தாலும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படாது.

பழைய விலையிலேயே ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும். விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் என இரண்டு திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அரசிதழில் சட்டத்திட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருள்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்று விளக்கினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...