நீலகிரியில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 1) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு (2016-2018) தலைவர் வி.செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சட்டமன்றப் பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுத் தலைவர் பேசியதாவது, “உதகை கதரங்காடியினை சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.41.15 லட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்திடவும், மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்களை கவர்ந்திடவும், கதர் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதன் மூலம் கதர் கிராமப்பொருட்களை பல்வேறு தரப்பினரும் அறிந்திடும் வகையில் உதகையில் நடமாடும் கதரங்காடி செயல்படுத்திட ரூ.35.29 இலட்சம் மதிப்பீட்டில் திட்ட எடுத்துரையும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கதர் மற்றும் கிராமத் தொழில் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கதர் வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் இயங்கும் 12 கூட்டுறவு சங்கங்கள் ரூ.60 லட்சம் நிதியுதவில் புணரமைக்கப்பட்டுள்ளது. 68 சர்வோதய சங்கங்களுக்கு ரூ.34.74 கோடி தள்ளுபடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. பட்டு நெசவு செய்யும் கதர் வாரிய நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களை புதுப்பிக்க ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார். 

இக்கூட்டத்தில் சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்டஏடுகள் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...