இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. சசிகுமாரின்  இறுதி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது. 

தொடர்ந்து இந்த கொலை வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இவ்வழக்கு குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையதாக முபாரக், சதாம் ஆகிய இருவரின் புகைப்படத்தை போலீசார் வெளிட்டனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் இன்று மாலை சாய்பாபா காலனி பகுதியில் பதுங்கியிருந்த சதாம்-ஐ போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேடப்படும் மற்றொரு நபர்



Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...