பொள்ளாச்சியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் இராசக்காபாளையம், ஒக்கிலிப்பாளையம் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவிக்கையில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் துறை உயர் அலுவலர்கள் மூலம் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளபடுகின்றது.

அதன்படி பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் இராசக்காபாளையம், ஒக்கிலிப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களிடத்தில் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள், பேரணிகள், விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பல தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொது இடங்களில் கொசு உற்பத்தியை குறைத்து அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் கொசு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கையாக புகை மருந்து மூலம் கொசுக்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீர் மூலம் உற்பத்தியாகும் லார்வாக்கள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிப்பாதுகாப்பது, வீடுகளில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்வது, குடிநீரை காய்ச்சி பருகுதல், நீர்பாத்திரங்களில் கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைத்தல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காய்சசலுக்கான அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சி அமைபைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மாவட்டந்தோறும் குழுக்களாக பிரிக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டு மேற்பார்வை செய்து வருகின்றனர்.

மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்துப்பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து வகையான காய்சலுக்கும் தேவையான மாத்திரைகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் இருப்பில் உள்ளன. இது தவிர எந்தப்பகுதிகளிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தப்பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் தங்கள் வீட்டினுள் தண்ணீர் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீட்டினருகே, பயன்படாத சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், வாளி, பிளாஸ்டிக் தட்டுகள், டயர்கள், திறந்த கிணறு போன்றவற்றினை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி சுகாதாரத்தினை பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், கிணத்துக்கடவு வட்டாட்சியர் பொன்னம்மாள் மற்றும் சுகாதாரம், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...