நீலகிரியில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத் துறைகளின் கலந்தாய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகை, தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்று (ஜூலை 4) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத் துறைகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும், பைக்காரா - மாயார் நீர் மின் திட்டம் மற்றும் குந்தா நீர் மின் திட்டம் ஆகிய இரண்டு மின்னுற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மின் நிலையங்களின் விவரங்களும், ஒவ்வொரு மின் நிலையங்களிலுள்ள மின்னாக்கிகளின் நிலை குறித்தும், அணைகளின் நீர் இருப்பு மற்றும் ஈடான மின்உற்பத்தி அளவுகள் குறித்தும், கடந்த ஐந்து வருடங்களில் மின்நிலையங்களின் மின் உற்பத்தி செயல்திறன் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கூடலூர் பகுதியில் மின் நுகர்வோர்கள் நலன் கருதி சீரான மின்சாரம் வழங்க துணை மின் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோத்தகிரி வட்டத்திலுள்ள கோடநாடு, கெரடா மட்டம், ஈளாடா, நெடுகுளா, கிரீன் டீ தொழிற்சாலை மற்றும் மேடநாடு ஆகிய பகுதிகளின்மின் அழுத்த குறைபாடுகளை சீர் செய்யவும் துணை மின் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சேரம்பாடி (ம) உப்பட்டி ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதேபோல் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் மொத்த ஏக்கர் நிலப்பரப்பில் எத்தனை ஏக்கரில் தேயிலை விளைவிக்கப்படுகிறது எனவும், தேயிலை மகசூலைப் பெருக்க என்னென்ன வழிமுறைகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது எனவும், தேயிலைச் செடியின் கிளைகளை வெட்டுதல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது எனவும், அதன்மூலம் உற்பத்தி எவ்வாறு உயர்த்தப்படுகிறது என்பது குறித்தும் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  தொழிற்சாலைகளில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களின் நலன் குறித்தும், அவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க நிறுவனம் மருத்துவமனை ஏதேனும் நிறுவியுள்ளதா என்பது குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் இவ்விரு துறைகளின் நிறை குறைகளை கேட்டறிந்த குழுத்தலைவர் அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் ஆய்வுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...