டாக்டர் மோகன்’ஸ் டயாபிடிஸ் ஸ்பெஷாலிட்டி செண்டரில் ஆரோக்கிய உணவு சமையல் போட்டி

சர்க்கரை எனப்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் சல்ல சமநிலையிலான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியமானதாகும். இந்த உணவு சிறப்பு உணவு என்றும், சர்க்கரை நோயாளிகள் மட்டுமே சாப்பிட முடியும், இது மிகவும் சாதுவான சாப்பிடுவதற்கு போரடிக்கக்கூடியது என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு குறித்து தவறான கருத்துக்கள் நிலவுகிறது.

டாக்டர் மோகன் டயாயிடிஸ் ஸ்பெஷாலிட்டி செண்டர், இந்தத் தவறான கருத்தை புறந்தள்ளுகிறது என்பதுடன், வாயில் எச்சில் ஊரக்கூடிய உணவுவகைகளை தயாரிப்பது என்றும் இது ஆரோக்கியமானது மட்டும் இன்றி தயாரிப்பது எவ்வளவு சுலபமானது என்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்றது என்றும் விளக்குகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சமைப்பது என்ற சிறப்பு சமையல் விளக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் 6ம் தேதி (இன்று) கோவை, அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவாரி ஸ்ரீமத் கட்டிடத்தில் உள்ள மோகன்ஸ் ஸ்பெஷாலிடி டயாபிடிஸ் செண்டரில் நோயாளிகள் மற்றும் நுகர்வோருக்காக நடத்தியது.



சமையல் கலைஞர் திருமதி மது வாத்வா, ஃபிளேக்ஸ் அடை, சென்னா மஷ்ரூம் சல்மா, ஸ்பிரௌட் சப்பாத்தி, டோஃபு சட்னி, உள்ளிட்ட எட்டு வகையான உணவு வகைகள் குறித்த செயல்விளக்கத்தை செய்து காட்டினார். இந்த உணவு வகைகள் தயாரிப்பதற்கு குறைவான நேரமே ஆகும் என்பதால் இவற்றை வீடுகளில் அன்றாடம் தயாரிக்கலாம்.

டாக்டர் மோகன்ஸ் ஸ்பெஷலிட்டி டயாபிடிஸ் மையத்தின் ஆலோச௧ர் டாக்டர் ரவி கண்ணன் கூறுகையில், “டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அவர்கள் தாங்கள் பெறும் சிகிச்சை மற்றும் உட்கொள்ளும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு அப்பாற்பட்டு, அவர்கள் உட்கொள்ளும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். நீரிழிவை நிர்வகிப்பதில் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிகிறது எனப்தால் இதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த செயல்விளக்க நிகழ்ச்சியானது சர்க்கரை நோயாளிகள் மற்றும் நுகர்வோரை கருத்தில் கண்டு நடத்தப்பட்டது, ஏனெனில் அவர்களில் பலர், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவை வீட்டிலேயே தயாரிப்பது குறித்து அடிக்கடி கேட்கின்றனர்” என்றார்.

சமையல் கலைஞரான மது வாத்வா, “சர்க்கரை நோயாளிகளுக்கான உண்வு என்பது பொதுவாக போரடிப்பதாக கருதப்படுவதுடன், தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதுடன் தயாரிப்பதற்கு கடினமாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் சமைக்கும் முறை, பயன்படுத்ப்படும் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை பொருத்ததாகும் என நான் வலிமையாக நம்புகிறேன். இங்கு செய்து காண்பிக்கப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை, சுவையானவை மற்றும் தயாரிப்பதற்கு எளிதானவை. நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமாகும்” என்றார்.

பல்வேறு நுகர்வோர் மற்றும் நோயாளிகள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு வகைகள் பற்றித் தெரிந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...