தொண்டாமுத்தூரில் புதிய அரசு கலைக் கல்லூரி இன்று துவக்கம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அ.கணபதி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கி வைத்தார். 





அதனைத்தொடர்ந்து புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கைச்சான்று, வேளாண்மைத்துறையின் மூலம் தென்னை மறுநடவு மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.3.25 லட்சம் மதிப்பில் மானியத்துடன் தென்னைக்கன்று, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 6 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.





இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரி வாசு, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் (பொ) கலா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...