எரிசக்தி சேமிப்பினை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கிற்கு ஆட்சியர் அழைப்பு

எரிசக்தி தணிக்கை மற்றும் எரிசக்தி சேமிப்பினை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளுக்கு மின்சாரம், நிலக்கரி, விறகுகள், டீசல், ஃபர்னஸ் ஆயில் போன்ற எரிபொருட்களை அன்றாடம் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. எரிபொருட்களின் இயற்கை வள ஆதாரங்கள் குறைந்து கொண்டே வருவதாலும், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாலும், தற்போது எரிபொருள் சேமிப்பு என்பது தவிர்க்க இயலாத நடவடிக்கை ஆகும்.

அதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் எரிபொருள் தணிக்கையினை செயல்படுத்தி எரிபொருள் ஆற்றலின் சேமிக்கும் நடவடிக்கையினை ஊக்கப்படுத்தும் வகையில் வரும் ஆகஸ்ட் 17ம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருநாள் கருத்தரங்கம், கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட தொழில் மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தின் போது முன்னுரிமை அடிப்படையில் சுமார் 50 பங்கேற்பாளர்களுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்படும். மேலும், பல்வகை தொழிற்சாலைகளின் சிறப்பு நேர்வுகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெற தங்கள் விருப்பத்தினை நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் ஆகஸ்ட் 16ம் தேதி மாலைக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 9443113825, 9442223823, 8870066684 மற்றும் 9500830498 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே, தொழில் நிறுவனங்கள் எரிசக்தி ஆற்றல் தணிக்கை மற்றும் சேமிப்பு தொடர்பான நுட்பங்களை பெற்று தமது பொருட்களின் உற்பத்தி செலவினை குறைத்து சந்தை போட்டிகளில் நிலைத்து நின்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...