கோவை- மும்பை செல்லும் விமானம் தாமதம்- பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு

கோவையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானம் குறித்த நேரத்தில் கிளம்பாததால் அவதியடைந்த பயணிகள் கோவை விமான நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் இருந்து மும்பைக்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் கிளம்பவில்லை. விமானம் கிளம்புவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும், மும்பை செல்வதற்கான மாற்று ஏற்பாடு குறித்து முறையான விளக்கம் அளிக்காததால், பயணிகள் விமான நிலையத்திற்குள் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரி வலியுறுத்திய பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இரவு 7 மணிக்கு வேறு விமானம் மூலம் மும்பை செல்வதற்காக மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...