பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

ஆகஸ்ட் 11 இன்று முதல் செப்டம்பர் 13-ஆம் தேதி வரை சேலம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயில் தடப்பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் காகங்கரை- சாமல்பட்டி மற்றும் திருப்பத்தூர்- காகங்கரை ரயில் நிலையங்களுக்கிடையே இன்று முதல் (ஆகஸ்ட் 11) முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை ரயில் தடப்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சேலம் கோட்டம் வழியாக செல்லும் ரயில்கள் இயக்கத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

13.8.17, 20.8.17, 27.8.17, மற்றும் 03.9.17 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் ரயில் எண் 07115 ஹைதராபாத் கொச்சுவேளி சிறப்பு ரயில் 23 நிமிடங்கள் தாமதமாகவும், 10.9.17 அன்று 15 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

15.8.17, 22.8.17, மற்றும் 29.8.17 ஆகிய செவ்வாய் கிழமைகளில் ரயில் எண் 22815 பிலாஸ்பூர் எர்ணாகுளம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் தாமதமாகவும், 05.9.17 மற்றும் 12.9.17 ஆகிய செவ்வாய் கிழமைகளில் 25 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

16.8.17, 23.8.17, மற்றும் 30.8.17 ஆகிய புதன்கிழமைகளில் ரயில் எண் 22619 பிலாஸ்பூர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் தாமதமாகவும், 06.9.17 மற்றும் 13.9.17 ஆகிய தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

17.8.17, 24.8.17, 31.8.17 மற்றும் 07.9.17 ஆகிய விழாக்கிழமைகளில் ரயில் எண் 12970, ஜெய்பூர் கோயம்பத்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 33 நிமிடங்கள் தாமதமாகவும், ரயில் எண் 16360 பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...