அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் - அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர்

இன்றைய பள்ளி பாடத்திட்டத்தினால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாத நிலை இருப்பதாகவும், மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுமென அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:-

இன்றைய பள்ளி பாடத்திட்டம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை தருவதாக உள்ளது. மற்ற மாநிலங்களில் பாடத்திட்டங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக  பாடத்திட்டம் மேம்படுத்தாமல் இருப்பதால் மேல்படிப்பு மற்றும் நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இன்றைய பள்ளி பாடத்திட்டத்தினால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாத நிலை உள்ளது. மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையிலும், வருங்கால தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...