குடும்பத்துடன் பார்க்கத்தக்க ‘ஏ’ படம் - தரமணி


எதார்த்த சினிமா-வை இயக்கும் தரமான இயக்குனர் என்ற பெயரை தான் இயக்கிய முதல் படத்திலேயே பெற்றவர் ராம். இவர் இயக்கியது கற்றது தமிழ் மற்றும் தங்கமீன்கள் என்ற இரு திரைப்படங்கள் தான் என்றாலும் அவை ராமை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றே கூறலாம். அதுவே, தரமணி மீதான மக்களின் ஆர்வத்தை தூண்டியது.

பன்முக சிந்தனை கொண்ட இவ்வுலகில், ஒரு பெண் எவ்வாறெல்லாம் மற்றவர் சிந்தையில் விழுந்தெழுகிறாள் என்பதையும், ஒரு பெண் மீது அதீத காதலுற்ற ஆண், அவளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள என்னென்ன முயற்சிகள் செய்கிறான், அதற்கு இச்சமூகம் எந்த வகையில் காரணமானது என்பதை நோக்கிய கதையே தரமணி.

ஆதரவற்றோருக்கு அடைக்கலமாய் விளங்கும் ரயில் நிலையங்களில் ஒன்றான தரமணி ரயில் நிலையம் கூரையில் வாழ்பவர்தான் வசந்த்ரவி. பிஏ.ஆங்கிலம் முடித்த இவர், சென்னையில் வேலைக்கு சேர, அப்போது அஞ்சலியின் மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அமெரிக்கா செல்லும் அஞ்சலி தனக்கு 3 லட்சம் வேண்டும் என்று காதலனிடம் கேட்கிறார்.

ரயிலில் உறங்கியவாறு பயணித்த பெரியவரிடம் பணத்தை திருடி அஞ்சலியிடம் கொடுக்கிறார் வசந்த் ரவி. ஆனால், அமெரிக்கா சென்ற அஞ்சலி வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்கிறார்.

இதனால் மனமுடைந்த கதாநாயகன், மனமுடைந்து, வேலையிழந்து, இறுதியில் தரமணி ரயில் நிலைய காவலராக பணியாற்றும் அழகம்பெருமாளிடம் அடைக்கலம் பெறுகிறார்.

மென்பொருள் நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றும் ஆண்ட்ரியா, கணவனை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார். 

எதிர் பாராத விதமாக பெய்தமழை, ஆண்ட்ரியா வசந்த் ரவியை சந்திக்க வைக்க, இருவரம் தங்கள் முந்தைய காலத்தை பரிமாறிக்கொள்கிறார்கள்.

இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு, ஒரே வீட்டில் வாழ தொடங்குகிறார்கள். அப்போது, ஆண்ட்ரியா அவரது அலுவலக நண்பர்களுடன் பேசுவதை பார்த்து கோபம் கொள்ளும் வசந்த் ரவி, அவருடன் சண்டையிட்டு பிரிகிறார்.

அதன் விளைவாக, பல பெண்களை ஏமாற்றி பணம் பறிக்க தொடங்குகிறார். தவறுதலாக, தனக்கு அடைக்கலம் தந்தவரின் மனைவியையே ஏமாற்ற முற்பட்டு, மணம் வருந்தி திருந்துகிறார்.

மீண்டும் அவர் ஆண்ட்ரியா-வுடன் இணைகிறாரா? என்பது க்ளைமேக்ஸ்.

தரமணி-யில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குனர், அவர்கள் வழியே ஒரு கதையினையும், உணர்ச்சியினையும் பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

கோபம், விருப்பு, வெறுப்பு, காதல், அழுகை என்று ஒவ்வொரு உணர்வும் பார்வையாளர் மனதில் எழுந்து மறைகிறது. 

அதே நேரத்தில், படத்தின் நடுவே தனது குரல் மூலம் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறார் ராம். அதற்கு அவரே விளக்கமும் கொடுத்திருக்கிறார். பெண்ணியம் பேசும் பல படங்கள் வந்து சென்றாலும், பெண்ணியம் பேசுபவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும்.

படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் மக்கள் நினைப்பது, ‘ஏன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தார்கள்’ என்றுதான். 

கண்கூச வைக்கும்படி காட்சிகள் அமையவில்லை, அதிகமான கவர்ச்சியும் இல்லை. பெண், சிகரெட் புகைப்பதும், மது அருந்துவதும், ஒரு முறை கெட்டவார்த்தை பேசுவதும், ஸ்கர்ட் அணிந்து செல்வதும் மட்டும் தான் சென்சார் போர்டை இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்க தூண்டியதா என்பது சந்தேகமாகவே உள்ளது.

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்கத்தக்க ‘ஏ’ படமாக தரமணி இருப்பதாக திரைப்படம் பார்த்துவிட்டு வெளியேவரும் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

ஆண்டிரியா, வசந்த் ரவி உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...