மறைந்த ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளிவரும்- சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளியேவரும் என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும். வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து, கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பாக அதிமுக அம்மா அணியினர் இன்று  பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக அம்மா அணியின் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்அர்ஜூனன், கவுண்டம்பாளையம்  சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்துக்கு பின்னர் கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற  அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜெயலலிதாவின் கனவு திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார்.

புரட்சித் தலைவி அம்மா அணியினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்வார்கள். நீதி விசாரணை, சி.பி.ஐ விசாரணை எல்லாமே மனிதர்கள்தான் செய்கின்றனர். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளியேவரும். முனுசாமியின் கோரிக்கை சி.பி.ஐ விசாரணை, நாங்கள் நீதிவிசாரணை என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்.

வேதா இல்லத்தில் தனி நபர்களுக்கு உரிமை இருந்தால் அரசு அதற்கான இழப்பீட்டை கொடுக்கும். வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டால் அது ஜெயலலிதா மாணவ, மாணவியருக்கு உழைத்த உழைப்பின் சின்னமாக இருக்கும்.

இவ்வாறு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...