குடிசைமாற்று வாரியத்தில் வீடு பெற ரூ.36 ஆயிரம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இடத்தில் இருந்து வெளியேற அதிகாரிகள் மிரட்டுவதாகவும், குடிசை மாற்று வாரிய வீடு வழங்க 36 ஆயிரம் ரூபாயினை அதிகாரிகள் கேட்பதாகவும் கூறி 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை வி.எச் சாலை சி.எம்.சி காலனி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டசாலை என்ற பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு கட்ட கடந்த 2014-ம் ஆண்டு 377 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிலையில் இதுவரை அப்பகுதி வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் இதுவரை நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது சிலர் குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடு வழங்க 4 நாட்களுக்குள் 36 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மிரட்டல் விடுத்து வருகின்றனர். 



மேலும், இதில் விருப்பம் இல்லாத மக்கள் வெள்ளலூருக்கு செல்லுமாறும் அதிகாரிகள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், தங்கள் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தற்போதுள்ள அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டி மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...