மின்சக்தியில் சிக்கன செயல் திறன் கொண்ட புதுவகை ஏர் கம்ப்ரஷர் அட்லஸ்கோப்கோ கோவையில் அறிமுகம்

காற்றழுத்த தொழில்நுட்பம், வெற்றிடத்தை உருவாக்கும் பம்ப், கேஸ் ஜெனரேட்டர்களில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் அட்லஸ் கோப்கோ கம்ப்ரசர்கள் இந்தியாவில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த ஏர் கம்ப்ரஷர்களை பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து சேவையாற்றி வருகிறது.

‘மேக் இன் இன்டியா’ அரசின் அழைப்புக்கு ஏற்ப, புனேயில் உள்ள அட்லஸ் கோப்கோ ஏர் கம்ப்ரஷர் தொழிற்சாலையில், உலக புகழ் பெற்ற, மின் சிக்கனத்துடன் கூடிய பல்வேறு வேகத்தில் இயங்கும் கம்ப்ரஷர்களை தயாரிக்கிறது. கம்ப்ரஷர் காற்று தொழிற்சாலையில் மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 

தற்போது, ஆகஸ்ட் 23ல் கோவையில் அட்லஸ் கோப்கோ கம்ப்ரஷர் தொழில்நுட்ப வணிகத்தின் இந்திய பொதுமேலாளர் மற்றும் தலைவர் கன்ரட் லதம் வருகையும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இந்த நிகழ்வின்போது வாடிக்கையாளர்களுக்கு மின்சேமிப்புடன், உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்ப செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.



கோவையில் வாடிக்கையாளர்களை சந்தித்து ‘பார்ப்பதை நம்புங்கள்’ என்ற தத்துவத்துடன், மதிப்புமிக்க தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் நேரடியாக செயல் விளக்கங்கள் தரப்பட்டன. அவர்களது தொழில் வளர்ச்சிக்கு நிலையான ஆதரவு தரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் முதல் முறையாக பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் போது கன்ரட் லதம் பேசுகையில், ‘‘இந்தியாவில் எங்களது வாடிக்கையாளர்களின் வளர்ச்சியானது, எங்களுக்கு உயிர் மூச்சு போன்றது,’’ என்றார்.



பொது இன்ஜினியரிங், ஆட்டோமோட்டிவ், உற்பத்தி, ஜவுளி, மருந்துகள், உணவு, வாகனம், இரும்பு மற்றும் ஸ்டீல், எரிசக்தி மற்றும் பிற தொழில் முறைகளிலும் காற்றழுத்தம் தொழில்நுட்பம் அவசியமாகிறது.

சந்தையில் முன்னணி வகிக்கும் காற்று தயாரிப்புகள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் காற்றழுத்த தயாரிப்புகளை தருகிறது அட்லஸ் கோப்கோ. ஆயில் அழுத்த ஸ்க்ரூ ஏர் கம்ப்ரஷர், ஆயில் இல்லா ஏர் கம்ப்ரஷர், ஸ்க்ரூ புளோயர்கள், ஸ்க்ரோல் ஏர் கம்ப்ரஷர்கள், டூத் ஏர் கம்ப்ரஷர், பிஸ்டன் ஏர் கம்ப்ரஷர், டர்போ ஏர் கம்ப்ரஷர், வாட்டர் இன்ஜெக்டெட் ஸ்க்ரூ ஏர் கம்ரஷர், ரெசிப்ரோகேட்டிங் ஏர் கம்ப்ரஷர் மற்றும் பிற வகை கம்ப்ரஷர்கள் இதன் தயாரிப்புகளில் உதாரணங்கள் ஆகும்.



Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...