கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செப்டம்பர் 7ம் தேதி நிலவரப்படி மூன்று அணைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு நீர் வரத்து பதிவாகியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 7ம் தேதி நிலவரப்படி மூன்று அணைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு நீர் சேமிப்பு பதிவாகியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்ட முக்கிய நீர்த்தேக்கமாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் தற்போது 67.4 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 391 கன அடியாக உள்ளது. பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், செப்டம்பர் 7ம் தேதி நிலவரப்படி 48.4 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1027 கன அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து வினாடிக்கு 31 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்ட பெரிய நீர்த்தேக்கமாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் தற்போது 93.87 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 674 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 1381 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...