மக்கள் குறை தீர்ப்பு முகாமில் வெறிச்சோடி காணப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.



கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதையடுத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.



அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலதிற்கு மனு அளிக்க வருபவர்கள் தீ குளிக்க அவ்வப்போது முயற்சி மேற்கொள்வது வாடிக்கையாகி விட்ட நிலையில் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த சில வாரமாக தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முதற்கொண்டு அனைவரும தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இன்று வெளி ஆட்களின் வாகனங்கள் அனைத்தும் வெளியே நிறுத்தபட்டது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், இன்று மனுக்களும் குறைவாகவே வந்தது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...