அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மொட்டையடித்து போராட்டம்


நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இன்று சமத்துவ கழகத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'மத்திய, மாநில அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வானது ஏழை எளிய மக்களின் படிப்பையும் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனால் ஏழை மாணவி அனிதா அதிக மதிபெண் பெற்றிருந்தும், மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவை போல யாரும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழக மக்கள் அனைவரும் இதே போல் மொட்டையடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்' என்றார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...