அனிதாவின் மரணத்திற்கு நீதிகோரி கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம்



அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவி அனிதாவின் மரணத்திற்க்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நேற்று (செப்.,5) கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், போத்தனூரில் ரயில் மறியலும் நடைபெற்றது. இதேபோல, கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். 

கோவை, சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதி தலைவர் ஹனீப்கான் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் கட்சி நிவாகிகள் கலந்து கொண்டனர்.



கவுண்டம்பாளையத்தில், சட்டமன்ற தொகுதி தலைவர் அமீர் அப்பாஸ் தலைமையில் ஜி.என்.மில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதில், தொகுதி செயலாளர் யாசர், மாவட்ட செயலாளர் ரோஷன், மத்திய மாவட்ட தலைவர் அப்துல் காதர், பி.எப்.ஐ துடியலூர் டிவிசன் தலைவர் உசேன் மற்றும் கட்சி செயல்வீரர்கள் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



அதேபோல், கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிணத்துக்கடவு தொகுதி தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு, தெற்கு மாவட்ட தலைவர் அன்சர் செரீப் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி நிர்வாகிகள் தாஜுதீன், ஆரீப், கமால், முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த ரயில் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். 



Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...