நீட் தேர்வுக்கு எதிராக அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் : 30க்கும் மேற்பட்டோர் கைது


நீட் விவகாரம் மற்றும் அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் 6-வது நாளாக இன்றும்(செப்.,7) நீடிக்கிறது. 



இந்த நிலையில், கோவை, ஹோப் காலேஜ் பகுதியில் கோவை - சேலம் நெடுஞ்சாலையில் எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் இன்று (செப்.,7) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மாணவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். 



ஆனால், கலைந்து செல்ல அவர்கள் மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே, மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கோவை அரசு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...