செப்., 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்- மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் இரண்டாம் திட்டத்தில் செயல்பட்டு வரும் பிரதான குடிநீர் குழாயில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மேற்படி நாட்களில் கணபதி, காந்திபுரம், ஆவாரம்பாளையம், சித்தாபுதூர், ஆர்.எஸ்.புரம், காந்திபூங்கா, பாரதிபூங்கா, உக்கடம், புலியகுளம், ராமநாதபுரம், பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதை பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...