உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு பிசியோதெரபி மருத்துவ முகாம்

செப்டம்பர் 8, (இன்று) உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிசியோதெரபி மருத்துவ முகாம் சரவணம்பட்டியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளை பரிசோதனை செய்து பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

குறிப்பாக, அதிக எடையுள்ள தோள் பையை மாணவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு உடல் வலி வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் பிசியோதெரபி மருத்துவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. 

இது குறித்து கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர்.ராஜேஸ் கண்ணா கூறுகையில்:-

குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு காரணம் உடல் வலிமை மற்றும் உடல் உழைப்பு இல்லாததுதான். அதேபோல் குழந்தைகளை அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் இதனை தடுக்கலாம். 

குறிப்பாக மோபைல் போன், வீடியோ கேம், கணினி போன்றவற்றில் விளையாடும் விளையாட்டை தவிர்த்து விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாடும் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்களை தடுக்க முடியும். மேலும், இது மனநோயை தவிர்க்கவும் மனிதநேயத்தை வளர்க்கவும் உதவும்' என்று கூறினார்.

முன்னதாக, இந்த முகாமில் கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் ராஜா செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் புவனேஸ்குமார், இளவரசி, வினோதினி மற்றும் பலர் இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...