"ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தில் ரூ.15 கோடியில் விரிவாகும் "வ.உ.சி உயிரியல் பூங்கா"

கோவை மாநகர மக்களின் பிரதானப் பொழுதுபோக்குத் தலமாக இருப்பது வ.உ.சி. பூங்கா வளாகம். இது, கோவை மாநகரின் மையத்தில் அமைந்துள்ளதால் தினத்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதிலும், குறிப்பாக வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான உயிரினங்கள் இருப்பதால் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் பல்வேறு வகையான பறவையினங்கள், நரி, பாம்பு, மயில், குரங்கு, புள்ளி மான்கள், கட மான்கள், முதலை உள்ளிட்ட 23 வகைகளில் சுமார் 800-க்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.



தற்போது, இப்பூங்காவிற்கு மத்திய வன உயிரியல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆண்டுதோறும் உயிரியல் பூங்காவில் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போதுள்ள உயிரியல் பூங்கா 4.05 ஏக்கர் உள்ளதாலும், போதுமான இடவசதி இங்கு இல்லை. எனவே, அதிகாரிகள் பூங்காவிற்கு போதிய இடவசதியை ஏற்படுத்தினால் மட்டுமே பூங்காவிற்கு அனுமதி அளிக்கப்படும் என்றனர். அதனை தொடர்ந்து, உயிரியல் பூங்காவை வேறு இடத்திற்கு மாற்ற கோவையில் கவுண்டம்பாளையம், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் இடவசதியை மாநகராட்சி தேர்வு செய்து வந்தனர்.



இந்நிலையில், தற்போது அருகில் உள்ள தாவரவியல் பூங்காவுடன் உயிரியல் பூங்காவை இனைத்து அதனை முற்றிலும் புதிய பொலிவுடன் மாற்ற மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. தற்போது, இத்திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் ரூ.15 கோடி செலவில் உயிரியல் பூங்காவை சீரமைக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான அறிக்கையை மாநகராட்சி சார்பில் தயார் செய்யப்பட்டு, மத்திய வன உயிரியல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது அதற்கான அனுமதியும் மத்திய வன உயிரியல் ஆணையம் வழங்கியுள்ளது. விரையில் இதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.



இது குறித்து வ.உ.சி உயிரியல் பூங்கா இயக்குநர் செந்தில்நாதன் கூறுகையில்; தற்போதுள்ள உயிரியல் பூங்காவிற்கு போதிய இடவசதி இல்லாததால், தற்போது அருகில் உள்ள வ.உ.சி தாவரவியல் பூங்காவுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8.25 ஏக்கர் அளவில் இந்த உயிரியல் பூங்கா விரிவாக்கப்படும். 10 ஏக்கர் குறைவாக உள்ளதால் தற்போது மத்திய வன உயிரியல் ஆணையம் இந்த பூங்காவிற்கு மினி உயிரியல் பூங்கா என்ற அனுமதி கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த பூங்காவில் வீட்டு விலங்குகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், எளிதில் காணும் உயிரினங்கள் இருக்க அனுமதி இல்லை எனவும் வலியுறுத்தினர். இதனை, வன உயிரியல் அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர்.



பூங்காவின் விரிவாகத்திற்கான வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக்கம் செய்தவுடன் புதிய வகையான உயிரினங்கள் இடவசதிக்கு ஏற்றமாதிரி கொண்டு வரப்படும். பூங்காவில் தற்போது உள்ள மினி ரயிலை தடை செய்து பூங்காவில் புகையை குறைக்கும் வகையில் பேட்டரி வாகனம் அறிமுகப்படுத்தப்படும். இதில் முதியவர், உடல் ஊனமுற்றோர்கள் வாகனத்தில் இருந்தவாரே பூங்காவில் உள்ள உயிரினங்களை பார்வையிடலாம். பூங்காவில் ஒருசில பகுதியில் பொதுமக்களுக்காக தேனீர் கடைகள் திறக்கவும், புதிய அக்வாரியம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் மையப் பகுதியில் இருக்கும் இப்பூங்காவிற்கு பொதுமக்கள் தினமும் 500 முதல் 1,000 பேர் வரை விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வருவதாலும், பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே பூங்காவின் விரிவாக்கப் பணிகள் நடைபெறும். இந்த உயிரியல் பூங்கா சீரமைப்பதற்கான முழு திட்ட அறிக்கையை மத்திய வன உயிரியல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒருசில மாற்றம் செய்த பின்னர், முழு அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட பணிகள் மிக விரைவில் தொடங்கும் என்றார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...