தமிழக அரசால் நீட் பயிற்சி மையங்கள் கொண்டுவந்தால், கிராமப்புற மாணவர்களுக்கு ஆதாயம் கிட்டுமா..?

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்த்துள்ள தமிழக அரசு, மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடத்தி வருகிறது. 

மேலும், நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி மையமும் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்றும், நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி நீட்-டுக்கு எதிராக தமிழக மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். 

மேலும், பெரும்பாலான குழந்தைகள் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக தமிழ் வழியில் கல்வி பயின்று வருவதாகவும், இதனால், நீட் தேர்வுக்கான பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

இதனிடையே, கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் முறை மேம்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்".  இவ்வாறு அவர் கூறியிருந்தார். 

அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து சிம்ப்ளிசிட்டி செய்தி நிறுவனத்திடம், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பயிற்சி அளித்து வரும் கனகராஜ் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழகம் நல்ல நிலையில்தான் உள்ளது. தற்போதைய நீட் தேர்வை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் முறையான பயிற்சி மையங்கள் மற்றும் வசதிகளையும் செய்து கொடுத்தால்,  மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. 

நகர் மற்றும் கிராமத்தின் முக்கிய பகுதிகளில் செயல்படும் தனியார் பயிற்சி மையங்களும் நீட் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக அளிக்க முன்வர வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் நடக்குமாயின், நீட் தேர்விலும் தமிழக மாணவர்களின் நிலை கொடி கட்டி பறக்கும்". இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....