குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வர வழிவகை செய்யும்படி திமுக கோவை மாநகர தெற்கு மாவட்டக் குழுவின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள குறிச்சி குளத்தில் தண்ணீர் நிரம்பினால் அது சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், அனைத்து ஆழ்குழாய் கிணறுகளுக்கும் நீர்வளமாகவும், குறிச்சி பகுதி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஏதுவாகவும் இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நேரத்தில் பாலம் வேலை நடைபெறுகிறது என்று வாய்க்காலை அடைத்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதும் குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்து புட்டுவிக்கி என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறிச்சி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, உடனடியாக குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டுள்ள தடையை அப்புறப்படுத்தி குளத்தில் தண்ணீர் தேக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...