வீட்டு வசதி வாரிய வீடுகள் பெற வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பணம் கட்டியும் தற்போது வரை பத்திரம் கொடுக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வட்டிக்குமேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக வாயில் கருப்பு துணிகட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கணபதி மாநகர் மற்றும் உப்பிலிபாளையம் உட்பட பல பகுதிகளில் 7000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தால் 1991- 1992 ஆம் ஆண்டுகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேப்போல தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை தமிழகம் முழுவதும் 37,000 வீடுகளுக்கு பத்திரம் வழங்கப்படால் இழுத்தடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் அப்போதே முழுத்தொகையை கொடுத்தும் இதுவரை பத்திரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் அளித்தவர் அதிக தொகை கேட்டு வழக்கு தொடர்ந்ததையடுத்து அவருக்கு பணம் கொடுக்க பயனாளிகளிடம் அதிக தொகை கேட்டுள்ளனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பயனாளிகள் வழக்கு தொடர்ந்ததில் 6000 ரூபாய் சென்ட்க்கு கட்டினால் போதும் என்று தீர்ப்பு கூறியது. இந்த தொகையை கட்ட பயனாளிகள் தயாராக இருந்தும் வீட்டு வசதி வாரியம் சென்ட்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் கேட்பதாகவும், 1995 லிருந்து 2001 வரை இதற்கான வட்டியை கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. 

அப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதா, வருடத்திற்கு ஐந்து மாதம் கழித்துவிட்டு மீதி வட்டியை கட்ட ஆணை பிறப்பித்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில அரசு அளித்த தீர்ப்பை நிறைவேற்றாமல் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் 25 ஆண்டுகளுக்கு பணம் கட்டுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், வட்டிக்கு மேல் வட்டி போட்டு பயனாளிகளை துன்புறுத்துவதாகவும், 1992 ஆம் ஆண்டு வீடு வாங்கியவர்கள் பாதிபேர் இறந்து விட்டதாகவும், 25 ஆண்டுகளாக இன்னும் பட்டா கிடைக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வாயில் கருப்புதுணி கட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டு சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...