தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை 7.30 மணியளவில் உக்கடம் லாரிப்பேட்டை அருகிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மியான்மரில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுவதை கண்டித்தும், பத்திரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக படுக்கொலை செய்யப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் வருகின்ற (15-09-2017) வெள்ளிக்கிழமை ஆத்துபாலத்தில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சஹாப்தீன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; மியான்மரிலுள்ள ராகின் மஹானத்தில் ரோஹிங்கியா இன முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுகிறார்கள். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அங் சாங் சுகி என்ற பெண்ணின் தலைமையில் நடைபெறும் அரசில் இன அழிப்பு படுகொலைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல், அகதிகளாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் தஞ்சம் அடைய வந்தவர்களை மத்திய அரசு மியான்மருக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. 

இதனை கண்டித்தும், அதேபோல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டும் வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நீட் தேர்வை நிறுத்த கோரி போராடி வருகின்றனர். இவர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டத்தின் சார்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆத்துபாலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...