நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமென் இந்தியா மூமெண்ட்டைச் சேர்ந்த பெண்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யவும், அனிதா தற்கொலைக்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளித்திருந்தது.

இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டி வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூமெண்ட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.



விமன் இந்தியா மூமெண்ட்டின் மாவட்ட தலைவர்  ஃப்ரீத்தா பேகம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளே அனிதா மரணத்திற்கு காரணம் என்றும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.



Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...