ஜிஎஸ்டி பிரச்சனைகளை தீர்த்து ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும் - சைமா தலைவர் நடராஜ்

கோவையில் துரிதமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒருங்கிணைந்த ஜவுளி ஆலையான கே.பி.ஆர். மில்லின் நிர்வாக இயக்குநர் பி.நடராஜ், தொன்மையான மற்றும் பஞ்சாலை அதிபர்களின் சங்கமான தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) புதிய தலைவராக பொறுப்பேற்ற பின் இன்று பத்திரிகையாளர்களை கோவையில் சந்தித்து ஜவுளிச் சந்தையில் முன்னேற்றம் குறித்து பேசினார். 

அப்போது, அவர் பேசியதாவது:- "ஜவுளித் தொழில் சிறு சிறு குழுக்களாக செயல்படும் ஒரு தொழிலாகும். இந்த தொழிலின் ஒட்டு மொத்த செயல்திறன் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இது நாள் வரை அனைத்து துணிகளுக்கும் வாட் வரியில் இருந்து விலக்களிக்கபட்டு வந்ததுடன் பலரும் விருப்ப வரியை பின்பற்றி வந்தார்கள். நெசவுத் தொழில் சார்ந்தவர்கள் துணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்கப்படும் என்று நம்பினர். அதனால், பலரும் நூல் கொள்முதலை நிறுத்தினர், வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

செப்டம்பர் 9-ம் தேதியன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளித் தொழிலின் எந்த ஒரு பிரிவுக்கும் வரியில் இருந்து விலக்களிப்பது பற்றி எந்த அறிவிப்பு வெளியிடப்படாததால், ஜிஎஸ்டி வரிக்காக பதிவு செய்வது அதிகரித்துள்ளது. நூலுக்கான தேவை பெரும்பாலான சந்தைகளில் குறிப்பாக பிவாண்டி, இச்சல்கரன்ஜி மற்றும் கொல்கத்தாவில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிகரித்து வருகிறது. அடுத்த 15 நாட்களில் சந்தை சாதாரண நிலைக்கு திரும்பும். மேலும், விற்பனையாகாதாக நூல் கையிருப்பும் குறைந்த அளவில் இருக்கிறது. 

உலகளவில் பருத்தி உற்பத்தி 2017-18ல் நன்றாக உள்ளது. இதற்கு காரணம் பருத்தி பயிரிடப்படும் நிலம் பரப்பளவு 11 சதவீதம் அதிகரித்திருப்பதாகும். மேலும், சாதகமான பருவமழையால் இந்தியாவில் 15 சதவீதம் அளவுக்கு பயிரிடப்படும் நிலம் பரப்பளவு கூடியுள்ளதால் பருத்தி உற்பத்தி அதிகரிக்கும். 

மேலும், பஞ்சின் விலையும் பருத்தி சீசன் காலத்தில் குறைவாக இருக்கும். அதனால் உள்நாட்டில் தேவை அதிகரிக்கும். பஞ்சின் விலை குறைவாக இருந்தால் உலகச் சந்தையில் நமது ஏற்றுமதியாளர்கள் போட்டியிட வசதியாக இருந்கும். சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சில தவறான விளைவுகள் ஏற்பட்டுள்ளது. அவைகளை போர்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் உலகளவில் இந்திய ஜவுளிப் பொருட்கள் போட்டியிட முடியும்.

உலகளவில் தேவை குறைவாக உள்ளதாலும், வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள வரியில்லா ஒப்பந்தங்கள் ஆகியவற்றாலும், மேலும் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாலும் இந்திய ஜவுளித் தொழில் மிகவும் சிரமமான சூழ்நிலையை கடந்த மூன்று ஆண்டுகளாக சந்தித்து வருகிறது. 

கடந்த மூன்றாண்டுகளில் ஏற்றுமதி தொடர்ந்து 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியில் அதிகப்படியாக செலுத்தப்படும் உள்ளீட்டு வரியை துணி உற்பத்தியின் போது திருப்பி அளித்தால் மட்டுமே உற்பத்தி செலவு அதிகரிப்பதை தடுத்து, மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், துணி இறக்குமதியை குறைக்கவும், விசைத்தறி, கைத்தறி, துணி பதனிடுதல் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இழப்பை தடுக்கவும் உதவும். மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும்.

மேலும், நிலுவையில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்கி அவர்களை நிதி சிக்கலில் இருந்து மீட்க வேண்டும்".

இவ்வாறு சைமா தலைவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...