சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த சம்பவம்: இன்று விசாரணையை தொடங்குகிறார் ஐ.ஏ.எஸ்.அதிகாரி


சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் ஊழல் இருப்பதாக பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் சோமனூர் பேருந்து நிலைய விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள  ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககன் சிங் பேடி தலைமையில் தனி நபர் விசாரணை குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில், இது போன்ற சம்பவங்கள் வரும் காலகட்டத்தில் நடைபெறாமல் இருக்க ககன்சிங் பேடி கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 15) விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

இந்த விசாரணையில் பொதுமக்கள் கலந்து கொண்டு விசாரணை குழுவிடம் நேரிலோ அல்லது மனு மூலமாகவோ கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...