நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு சியாசத் உருது தினசரி மற்றும் தன்னார்வ அமைப்பின் கூட்டமைப்பு ஆதரவு

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் பேரணியின் ஒரு பகுதியாக ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு, நேற்று (செப்.15) ஐதராபாத் சியாசத் உருது தினசரி மற்றும் தன்னார்வ அமைப்பின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதில், இஸ்லாமிய மதத்தலைவர் மௌலானா சாதிக் மொஹிதீன் பாஹீம், தெலுங்கானா துணை முதலமைச்சர் முகம்மது மஹ்மூத் அலி, சியாசத் தலைமை பதிப்பாசிரியர் நவாப் சாஹித் அலிகான், எம்.பி விஸ்வேஸ்வர ரெட்டி, தன்னார்வ அமைப்பின் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் மஸார் ஹுசைன் ஆகியோர் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், நதிகளை மீட்போம் இயக்கத்தை பற்றி விளக்கினார். மேலும், " நீங்கள் நமாஸ் செய்பவராக இருந்தாலும், பஜனை பாடுபவராக இருந்தாலும், தியானம் செய்பவராக இருந்தாலும், நீங்கள் நீர் பருகுபவராக இருந்தால் நதிகளை மீட்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அக்டோபர் 2ம் தேதிக்கு பிறகு நதிகளை மீட்போம் இயக்கத்தின் திட்ட பரிந்துரை அனைவருக்கும் வழங்கப்படும். அனைவரது கருத்துக்களும், பரிந்துரைகளும் இந்த திட்டத்தில் வரவேற்கப்படும்", என்றார்.

மேலும், நதிகளை மீட்கும் இந்த முயற்சியில் கட்சி, அரசியல் பேதமின்றி அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைத்து நதிகளை மீட்க முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

இஸ்லாமிய மதத்தலைவர் மௌலானா சாதிக் மொஹிதீன் பாஹீம் பேசுகையில், " நீர் என்பது இந்த பூமிக்கு இறைவன் அளித்துள்ள பரிசு என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் அனைத்து உயிரினங்களும் நீரை சார்ந்து உள்ளன. நாம் நீரின் மதிப்பு உணர்ந்து வாழ வேண்டும். மனிதன் நீரை மாசுபடுத்தவோ வீண் செய்யவோ கூடாது. நம் நதிகளை காப்பதும் அடுத்த தலைமுறைக்காக நதிகளை பராமரிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை", என்றார்.

நதிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்குரு, நாடு முழுவதும் 30 நாட்கள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3-ம் தேதி கோவையில் தொடங்கிய இந்த பயணத்தில் சத்குரு குமரி முதல் இமயம் வரை சுமார் 7,000 கி.மீ. தாமே வாகனம் ஓட்டி 16 மாநிலங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நிகழ்த்த உள்ளார். அக்டோபர் 2ம் தேதி தில்லியில் இப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார்.



அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தனியார் நிறுவனங்கள், சினிமாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரும், விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் பேராதரவு அளித்து வரும் 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' இயக்கத்திற்கு உங்கள் ஆதரவை அளிக்க 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...